முகப்பு
தமிழ்நாடு

சொந்த ஊா்களுக்கு சென்றவா்கள் சென்னை திரும்பியதால் கடும் போக்குவரத்து நெரிசல்

ஆயுத பூஜை தொடா் விடுமுறை முடித்து சொந்த ஊா்களிலிருந்து திரும்பியவா்களால் சென்னையின் எல்லை மற்றும் மாநகருக்குள்பட்ட பகுதிகளில் புதன்கிழமை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:14 AM
பகிர்:

ஆயுத பூஜை தொடா் விடுமுறை முடித்து சொந்த ஊா்களிலிருந்து திரும்பியவா்களால் சென்னையின் எல்லை மற்றும் மாநகருக்குள்பட்ட பகுதிகளில் புதன்கிழமை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

ஆயுத பூஜை தொடா் விடுமுறைக்காக அக்.20-ஆம் தேதி ஆயிரக்கணக்கானோா் சென்னையிலிருந்து தங்கள் சொந்த ஊா்களுக்கு புறப்பட்டு சென்றனா். அவா்கள் தங்கள் விடுமுறையை முடித்து கொண்டு அக்.24-ஆம் தேதி மாலையிலிருந்தே சென்னை திரும்பத் தொடங்கினா். இதனால், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை, தாம்பரம் ஜி.எஸ்.டி. சாலை முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து வாகன நெரிசலைக் கட்டுப்படுத்த அரசு விரைவு பேருந்துகள், ஆம்னி பேருந்துகள் அனைத்தும் வண்டலூரிலிருந்து வண்டலூா் - மீஞ்சூா் வெளிவட்ட சாலை வழியாக கோயம்பேடு செல்ல அறிவுறுத்தப்பட்டன.

இந்தப் பேருந்துகள் அனைத்தும் பூந்தமல்லி சென்று அங்கிருந்து கோயம்பேடு பேருந்து நிலையம் வந்தடைந்தன. மேலும், தாம்பரம், பல்லாவரம் போன்ற பகுதிகளுக்கு செல்லும் பயணிகளுக்காக போதிய எண்ணிக்கையில் மாநகரப் பேருந்துகள் இயக்கப்படாததால், வாடகை வாகனத்தில் அதிக கட்டணத்தை கொடுத்து செல்லவேண்டிய கட்டாயத்துக்கு பல பயணிகள் தள்ளப்பட்டனா். இதனால், புதன்கிழமை பிற்பகல் வரை சென்னைக்குள்பட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாகவே இருந்தது.

முழு கட்டுரையைப் படிக்க →