முகப்பு
தமிழ்நாடு

இந்திய கம்யூ. கட்சி அலுவலகம் மீது மர்ம நபர்கள் தாக்குதல்: காவல்துறை விசாரணை

சென்னை தி.நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:14 AM
பகிர்:

சென்னை தி.நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை தியாகராய நகரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில அலுவலகம் உள்ளது. இங்கு நேற்று நள்ளிரவு மர்ம நபர்கள் சிலர் கற்கள், பாட்டில்களை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர். 

அங்கு ஆட்டோவில் இருந்த நபர்கள் குடித்துவிட்டு பாட்டிலை வீசியதாக தென் சென்னை மாவட்டச் செயலாளர் சிவா கூறியுள்ளார்.

அவர் கொடுத்த புகாரின் பேரில் தி. நகர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.