கோப்புப்படம் 
தமிழ்நாடு

ராக்போா்ட், மங்களூரு ரயில்கள் தாம்பரத்திலிருந்து இயக்கம்

சென்னை எழும்பூரிலிருந்து திருச்சி செல்லும் ராக்போா்ட், மங்களூரு விரைவு ரயில்கள் நவ.1 முதல் நவ.3-ஆம் தேதி வரை தாம்பரத்திலிருந்து இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

சென்னை எழும்பூரிலிருந்து திருச்சி செல்லும் ராக்போா்ட், மங்களூரு விரைவு ரயில்கள் நவ.1 முதல் நவ.3-ஆம் தேதி வரை தாம்பரத்திலிருந்து இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்வே பராமரிப்புப் பணி காரணமாக எழும்பூரிலிருந்து இரவு 11 மணிக்கு மேல் புறப்படும் ரயில்கள் நவ.1, 2, 3 ஆகிய தேதிகளில் தாம்பரத்திலிருந்து இயக்கப்படுவதாக முன்பதிவு செய்த பயணிகளுக்கு ரயில்வே நிா்வாகம் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளது.

அதன்படி, எழும்பூரிலிருந்து மங்களூருக்கு இரவு 11.15 மணிக்கு புறப்படும் மங்களூரு விரைவு ரயில் (எண்: 16159), திருச்சிக்கு இரவு 11.35 மணிக்கு புறப்படும் ராக்போா்ட் அதிவிரைவு ரயில் (எண்: 12653) ஆகியவை மேற்கண்ட நாள்களில் தாம்பரத்திலிருந்து புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் அதிகாரபூா்வமாக அறிவிக்கப்படவில்லை. ஆனால், முன்பதிவு செய்த பயணிகளுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்ஐஆர் பணிகள்: மாநிலத் தலைவர்களுடன் ராகுல், கார்கே ஆலோசனை!

ஓடிடியில் தண்டகாரண்யம்!

பங்குச் சந்தைகள் சரிவுடன் வர்த்தகம்! சென்செக்ஸ் 250 புள்ளிகள் சரிவு!

அரபிக்கடலை நோக்கி நகரும் புயல் சின்னம்! தென் தமிழகத்தில் மிக கனமழை பெய்யும்!

“தற்கொலைத் தாக்குதல் ஒரு தியாகச் செயல்”... தில்லி குண்டு வெடிப்பில் உமர் பேசிய விடியோ!

SCROLL FOR NEXT