உருகும் பனிமலை!
புவியின் மிகப் பெரியதும், அண்டார்டிகாவின் மிகப் பிரமாண்டமானதும், பழமையானதுமான 'ஏ23ஏ' பனிமலையானது மிக விரைவாக உருகி, தெற்குப் பெருங்கடலில் அதன் 40 ஆண்டு பயணத்தை முடிக்க உள்ளது.
புவியின் மிகப் பெரியதும், அண்டார்டிகாவின் மிகப் பிரமாண்டமானதும், பழமையானதுமான 'ஏ23ஏ' பனிமலையானது மிக விரைவாக உருகி, தெற்குப் பெருங்கடலில் அதன் 40 ஆண்டு பயணத்தை முடிக்க உள்ளது. தெற்கு அட்லாண்டிக் கடல்நீர் மிகவும் வெப்பமாக இருப்பதால், யாரும் எதிர்பாராத வேகத்தில் உருகி வருகிறது. இந்தப் பனிமலையில் முக்கியமான கனிமங்கள் நிறைந்துள்ளதால், அது உருகும்போது அந்தப் பகுதியில் கடல் வளம் அதிகரிக்கும்.
ஒரு டிரில்லியன் டன் எடையுள்ள 'ஏ23ஏ' பனிமலை , 1986-இல் அண்டார்டிகாவின் ஃபில்ச்னர்-ரோன் பனிமலைத் தொகுப்பிலிருந்து பிரிந்தது. ஆனால், நீண்ட காலமாக, அது கடல்நீர் சுழலில் சிக்கிக் கொண்டதால் அது நகராமல் ஒரே இடத்தில் சுமார் 30 ஆண்டுகள் நின்றுகொண்டிருந்தது. இறுதியில் சுழலிலிருந்து விடுபட்ட பனிமலை நகரத் தொடங்கியது. 2020-இல் அட்லாண்டிக் பெருங்கடலின் வெப்பமான நீரில் மேலும் உடைந்து பிரியத் தொடங்கியுள்ளது. இந்தப் பனிப்பாறை வேகமாக உடைந்து வருவதை நாசா, பி.ஏ.எஸ். விஞ்ஞானிகள் கண்காணிக்கின்றனர்.
வெப்பநீரும் அலைகளும் பனிமலையை விரிசல் அடையச் செய்தன. அதன் நிஜ பரப்பளவு 4 ஆயிர சதுர கி.மீ. ஆகும். பனிமலை உருகி வருவதால், அது உண்மையில் கடலுக்கு உதவுகிறது. ஐஸ் கரையும்போது, சிறிய கடல் உயிரினங்கள், தாவரங்களுக்கு மிகவும் பயனுள்ள தாதுக்கள், ஊட்டச் சத்துகளைக் கடலில் கரைக்கிறது.
Advertisement
Advertisement
நாசா, பிரிட்டிஷ் அண்டார்டிக் கணக்கெடுப்பின்படி, 'நோய்வாய்ப்பட்ட பனிமலை' யின் பரப்பானது பெரும்பாலும் கடலில் மூழ்கியுள்ளது. பனிமலையின் மேற்பரப்பில் பெரிய, நீல நிறக் குளங்கள் உருவாகியுள்ளன என்பதை செயற்கைக்கோள் எடுத்த படங்கள் வெளிப்படுத்துகின்றன. இது மறைமுகமாக வெப்பமான காற்றுச்சூழலை ஏற்படுத்துகிறது. இது 'ஹைட்ரோஃபிராக்சரிங்' எனப்படும் செயல்முறையைத் தூண்டுகிறது.
பனிமலைப் பயணத்தில், அதன் மேற்பரப்பில் உருகும் நீரின் எடை விரிசல்களை மேலும் விரிவுபடுத்துகிறது. இதனால் பனிமலை துண்டுகளாக உடைகிறது. காலப்போக்கில், சூடான காற்று, 10 டிகிரி செல்சியஸ் வெப்ப கடல் நீரோட்டங்கள் இரண்டிலிருந்தும் ஏற்படும் இந்த நிலையான பாதிப்பு பனிப்பாறையை அதன் அசல் 4,000 சதுர கி.மீ. குறைத்துக் கொண்டே வருகிறது. இன்னும் சில வாரங்களில் பனிமலை கடலில் கரைந்து மறைந்துவிடும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.