தமிழ்நாடு

மதுரையில் மருது சகோதரர்களின் சிலைகளுக்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை

மதுரை தெப்பக்குளம் பகுதியில் மருது சகோதரர்களின் திருவுருவச் சிலைகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

DIN

மதுரை தெப்பக்குளம் பகுதியில் மருது சகோதரர்களின் திருவுருவச் சிலைகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி, குருபூஜை விழா ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் திங்கள்கிழமை நடைபெற்று வருகிறது. இதனையொட்டி, அவருக்கு மரியாதை செலுத்துவதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை வருகை தந்தார்.

இந்தநிலையில், முதல் நிகழ்வாக, இன்று மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் உருவச்சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதைத் தொடர்ந்து, மதுரை ஆவின் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் கட்டுமானப் பணிகளை தொடங்கி வைத்தார். 

பின்னர், தெப்பக்குளத்தில் உள்ள மருதுபாண்டியர்களின் உருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வின்போது அமைச்சர்கள், அதிகாரிகள் உடனிருந்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜனநாயகன் இசைவெளியீடு! இந்திய சினிமாவில் முதல்முறை! | Cinema Updates | Dinamani Talkies

வித் லவ் பாடல் புரோமோ!

விபி - ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! கார்கள் மீது மோதிய லாரி! | CBE

”ஏழைகளும் பாஜகவிற்கு சம்பந்தமில்லை!” 100 நாள் வேலைத்திட்டம் பெயர் மாற்றம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின்

SCROLL FOR NEXT