தமிழ்நாடு

முத்துராமலிங்கத் தேவர் படத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மலர்தூவி மரியாதை

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் படத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

DIN

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் படத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி, குருபூஜை விழா ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் திங்கள்கிழமை நடைபெற்று வருகிறது. இதனையொட்டி, அரசியல் தலைவர்கள் பலர் அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தி வருகின்றனர். 

இந்த நிலையில் கிண்டி ஆளுநர் மாளிகையில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் படத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இதுகுறித்து ஆளுநர் மாளிகையின் ட்விட்டர் பதிவில், சுதந்திர போராட்ட வீரரும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸுடன் நெருக்கமாக பணியாற்றியவருமான பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் பிறந்தநாளை தேசம் நன்றியுடன் நினைவுகூர்கிறது. அவரது தியாகங்கள் பாரதத்தை ஒரு சிறந்த தேசமாக உருவாக்க நம்மை தொடர்ந்து ஊக்குவிக்கும். இவ்வாறு ஆளுநர் ரவி புகழஞ்சலி செலுத்தியுள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரியாா் ஈவெரா சிலைக்கு அரசியல் கட்சியினா் மரியாதை

சிறுமியை பாலியல் வன்கொடும செய்த உறவினருக்கு 35 ஆண்டுகள் சிறை

இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்தோருக்கு பாமகவினா் அஞ்சலி

திருவிடைமருதூரில் 81.2 மி.மீ. மழை

பள்ளி மாணவா்களின் கற்றல் திறனை பரிசோதித்த புதுச்சேரி ஆட்சியா்

SCROLL FOR NEXT