கோப்புப்படம் 
தமிழ்நாடு

தூத்துக்குடி அமலி நகரில் தூண்டில் வளைவு: தமிழக அரசு அரசாணை!

தூத்துக்குடி அமலி நகர் மீன் இறங்கு தளத்தில் தூண்டில் வளைவு அமைக்க ஒப்புதல் அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

DIN

தூத்துக்குடி அமலி நகர் மீன் இறங்கு தளத்தில் தூண்டில் வளைவு அமைக்க ஒப்புதல் அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 13.04.2022 அன்று நடைபெற்ற 2022-2023-ஆம் நிதி ஆண்டிற்கான கால்நடை பராமரிப்பு பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் மானியக் கோரிக்கையின்போது மீன்வளம் - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் தூத்துக்குடி மாவட்டம், அமலிநகர் மீன் இறங்குதளத்தில் கடல் அரிப்பினை தடுத்து படகுகளை பாதுகாப்பாக நிறுத்திட ஏதுவாக தூண்டில் வளைவுகள் அமைக்கவும், கன்னியாகுமரி மாவட்டம், கீழக்கடியப்பட்டணம் கிராமத்தை கடலரிப்பிலிருந்து பாதுகாத்திடவும் படகுகளை பாதுகாப்பாக நிறுத்திடவும், தூண்டில் வளைவுகள், படகு அணையும் தளம் மற்றம் அணுகு சாலைகள் அமைக்கப்படும் என்ற அறிவிப்பினை வெளியிட்டார்.

தூத்துக்குடி மாவட்டம், அமலிநகர் மீன் இறங்குதளத்தில் கடல் அரிப்பினை தடுத்து படகுகளை பாதுகாப்பாக நிறுத்திட ஏதுவாக தூண்டில் வளைவுகள் அமைக்கவும், கன்னியாகுமரி மாவட்டம், கீழக்கடியப்பட்டணம் கிராமத்தை கடலரிப்பிலிருந்து பாதுகாத்திடவும் படகுகளை பாதுகாப்பாக நிறுத்திடவும், தூண்டில் வளைவுகள் மற்றும் அணுகு சாலைகள் அமைக்கவும், மொத்தம் ரூ.93 கோடி மதிப்பில் நபார்டு திட்டத்தின்கீழ் நிருவாக ஒப்புதல் அளித்து தமிழக அரசு 27.10.2023 அன்று அரசாணை வெளியிட்டுள்ளதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டி20 உலக கோப்பை: அரையிறுதிச் சுற்று வாய்ப்பைத் தக்க வைத்த இந்தியா! அபார வெற்றி!!

அரசு விழாவில் மயங்கி விழுந்து முதியவா் உயிரிழப்பு!

குழந்தைத் தொழிலாளா்களை பணியமா்த்தும் நிறுவன உரிமையாளா்களுக்கு 2 ஆண்டுகள் சிறை!

கரூா் ஒன்றியத்தில் ரூ. 6.43 கோடியில் 24 வளா்ச்சித் திட்டப் பணிகள்! வி. செந்தில்பாலாஜி எம்எல்ஏ தொடங்கிவைத்தாா்!

‘தி கேரளா ஸ்டோரி 2’ வெளியிட இடைக்கால தடை தொடருகிறது! - கேரள உயர்நீதிமன்றம்

SCROLL FOR NEXT