முகப்பு
தமிழ்நாடு

ராஜ்கமல் பிலிம்ஸ் குடும்பத்தின் ஓர் உறுப்பினராகவே அறியப்பட்டவர் ஆர்.எஸ். சிவாஜி: கமல்ஹாசன் புகழஞ்சலி

ராஜ்கமல் பிலிம்ஸ் குடும்பத்தின் ஓர் உறுப்பினராகவே அறியப்பட்டவர் பெரிதும் ஆர்.எஸ். சிவாஜி என்று நடிகர் கமல்ஹாசன் புகழஞ்சலி செலுத்தியுள்ளார். 

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:56 AM
பகிர்:

ராஜ்கமல் பிலிம்ஸ் குடும்பத்தின் ஓர் உறுப்பினராகவே அறியப்பட்டவர் பெரிதும் ஆர்.எஸ். சிவாஜி என்று நடிகர் கமல்ஹாசன் புகழஞ்சலி செலுத்தியுள்ளார். 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், எனது நண்பரும், சிறந்த குணச்சித்திர நடிகருமான ஆர்.எஸ். சிவாஜி மறைந்த செய்தி அறிந்து மிகுந்த வேதனை கொள்கிறேன். சிறிய கதாபாத்திரம் என்றாலும் ரசிகர்கள் மனதில் காலம் கடந்தும் நீடிக்கும்படியான உயிரோட்டத்தை அளிக்கக்கூடிய ஆற்றல்கொண்டவர்.

எங்களது ராஜ்கமல் பிலிம்ஸ் குடும்பத்தின் ஓர் உறுப்பினராகவே பெரிதும் அறியப்பட்டவர். அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் என் இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். பிரபல திரைப்பட நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி உடல்நலக்குறைவால் இன்று(சனிக்கிழமை) காலமானார்.

நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் குணச்சித்திர நடிகராகவும் புகழ்பெற்றவர் ஆர்.எஸ்.சிவாஜி. அபூர்வ சகோதரர்கள் உள்பட கமல்ஹாசனின் பல படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் உதவி இயக்குநராகவும், ஒலி வடிவமைப்பாளராகவும் திரைத்துறையில் பணியாற்றியுள்ளார்.
 

முழு கட்டுரையைப் படிக்க →