தமிழ்நாடு

நடிகர் ரஜினிகாந்துடன் ஓ.பன்னீர்செல்வம் திடீர் சந்திப்பு

நடிகர் ரஜினிகாந்தை சென்னையில் உள்ள அவரது போயஸ் தோட்ட இல்லத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசினார். 

DIN

நடிகர் ரஜினிகாந்தை சென்னையில் உள்ள அவரது போயஸ் தோட்ட இல்லத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசினார். 

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட களியனூரில் ஓபிஎஸ் அணி சாா்பில் நாளை பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்தை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று திடீரென சந்தித்து பேசியுள்ளார். 

சென்னையில் உள்ள ரஜினியின் போயஸ் தோட்ட இல்லத்தில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. மேலும் இந்த சந்திப்பின்போது இருவரும் தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல் குறித்து பேசியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. 

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் கடந்தாண்டு ஜூலை மாதம் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய சினிமாவிலேயே பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா!

டெஸ்ட்டில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய நியூசி. வீரர் டெவான் கான்வே!

நேஷனல் ஹெரால்டு அமலாக்கத் துறையால் ஜோடிக்கப்பட்ட வழக்கு: ப.சிதம்பரம்

தென்னாப்பிரிக்கா: துப்பாக்கிச் சூட்டில் 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி!

15 புதிய அரசு பேருந்துகள்! கொடியசைத்து துவக்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் | நெல்லை | DMK

SCROLL FOR NEXT