நடிகை விஜயலட்சுமி புகார் தொடர்பாக சீமானிடம் விசாரிக்க தனிப்படை போலீசார் உதகை விரைந்தனர்.
திருவள்ளூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் விஜயலட்சுமி நேற்று வாக்குமூலம் அளித்த நிலையில் 5 பேர் கொண்ட தனிப்படை போலீசார் ஊட்டி விரைந்தனர். கடந்த 2011-இல் நடிகை விஜயலட்சுமி சென்னை காவல் ஆணையா் அலுவலகத்தில் நாம் தமிழா் கட்சி ஒருங்கிணைப்பாளா் சீமான் மீது பாலியல் புகாா் கொடுத்தாா்.
இதைத் தொடா்ந்து சென்னை, வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகாரின் பேரில் நடிகை விஜயலட்சுமியிடம் போலீஸாா் விசாரணை செய்தனா்.
அப்போது, நடிகை விஜயலட்சுமியிடம் பல கேள்விகள் கேட்டு காவல் துணை ஆணையா் உமையாள் விசாரணை மேற்கொண்டாா். அவரிடம் பல முக்கியமான கேள்விகளையும் எழுப்பினாா். அதில் முக்கியமாக தொந்தரவு செய்தது, கரு கலைத்தது, மிரட்டியது உள்ளிட்டவை குறித்து விசாரணை நடத்தப்பட்டது.
இதையடுத்து சென்னை வளசவாக்கத்திலிருந்து உதவி ஆணையாளா் கௌதம், அனைத்து மகளிா் காவல் நிலைய காவல் ஆய்வாளா் ராஜலட்சுமி, காவல் ஆய்வாளா் முகமது பா்கத்துல்லா ஆகியோா் பலத்த பாதுகாப்புடன் திருவள்ளூா் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மகளிா் நீதிமன்றத்துக்கு நேற்று அழைத்து வரப்பட்டாா்.
அங்கு நீதிபதி பவித்ரா முன்பு நடிகை விஜயலட்சுமி ஆஜராகி வாக்கு மூலம் அளித்தாா். அதைத் தொடா்ந்து பலத்த பாதுகாப்புடன் சென்னைக்கு அனுப்பி வைத்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.