தமிழ்நாடு

சென்னையில் பரவலாக மிதமான மழை!

சென்னையின் பல்வேறு பகுதிகளில் தற்போது பரவலாக மிதமான மழை பெய்து வருகிறது. 

DIN

தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை முதல் 6 நாள்கள் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் தற்போது பரவலாக மிதமான மழை பெய்து வருகிறது. 

வட தமிழகம் மற்றும் குமரிக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சிகள் காரணமாக ஞாயிற்றுக்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை (செப்.3-8) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்தநிலையில்,  சென்னையின் பல்வேறு பகுதிகளில் தற்போது பரவலாக மிதமான மழை பெய்து வருகிறது. 

சென்னை கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், தி.நகர், அசோக் நகர், அடையாறு, அண்ணாநகர், ஆவடி, அம்பத்தூா் உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரியாா் ஈ.வெ.ரா.சிலைக்கு அரசியல் கட்சியினா் மரியாதை

இடஒதுக்கீடு உரிமைப் போரில் உயிா் நீத்தவா்களுக்கு அஞ்சலி

திருப்பதிக்கு பிஆா்டிசி சிறப்பு பேருந்துகள்

அண்ணாமலைப் பல்கலை.யில் சமூகநீதி நாள் உறுதிமொழி

பிரதமா் மோடி பிறந்த நாள்: பாஜகவினா் நலத்திட்ட உதவி

SCROLL FOR NEXT