உதயநிதி ஸ்டாலின் (கோப்புப்படம்) 
தமிழ்நாடு

ரூ.10 இருந்தால் நானே தலையை சீவிக்கொள்வேன்: உதயநிதி பதிலடி!

உதயநிதி ஸ்டாலினின் தலையை வெட்டிக் கொண்டுவருபவர்களுக்கு ரூ.10 கோடி பரிசாக வழங்கப்படும் என அயோத்தி சாமியார் பரமஹம்ச ஆச்சார்யா அறிவித்திருந்தார். 

DIN

மிரட்டலுக்கு அஞ்சமாட்டேன். கவலைப்படவும் மாட்டேன் என விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் தலையை வெட்டிக் கொண்டுவருபவர்களுக்கு ரூ.10 கோடி பரிசாக வழங்கப்படும் என அயோத்தி சாமியார் பரமஹம்ச ஆச்சார்யா அறிவித்திருந்தார். 

உதயநிதியின் புகைப்படத்தை கத்தியால் வெட்டிய ஆச்சார்யா, புகைப்படத்தை எரித்து சாம்பலாக்கி விடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். 

அதில், உதயநிதி தலையைத் துண்டிக்க எனது வாளையும் தயார் செய்துள்ளேன் எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், இது தொடர்பாக தூத்துக்குடியில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், 10 ரூபாய் சீப்பு இருந்தால் போதும், எனது தலையை நானே சீவிக்கொள்வேன் என கேலியாக பதிலளித்துள்ளார்.  

மிரட்டலுக்கு எல்லாம் அஞ்சமாட்டேன் என்றும் கவலைப்படவும் மாட்டேன் எனவும் குறிப்பிட்டுள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிப்ரவரி மாத எண்கணித பலன்கள் - 2

பிப்ரவரி மாத எண்கணித பலன்கள் - 1

என்னென்ன அமெரிக்க வேளாண் பொருள்களுக்கு இந்தியாவில் அனுமதி? சு. வெங்கடேசன் கேள்வி

எச்சரிக்கை! தங்கம் வாங்குபவர் பின்பற்ற வேண்டிய முக்கிய விதிமுறைகள்!!

தமிழ் உள்பட 5 மொழிகளில் வெளியான துரந்தர் - 2 டீசர்!

SCROLL FOR NEXT