தமிழ்நாடு

சாலையோரம் வாகனங்களை நிறுத்தக் கூடாது: சேலம் ஆட்சியர்

இரவு நேரங்களில் லாரி உள்ளிட்ட வாகனங்களை சாலையோரம் நிறுத்தக் கூடாது என்று சேலம் மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

DIN

சங்ககிரி: சங்ககிரி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 6 பேர் உயிரிழந்த நிலையில், இரவு நேரங்களில் லாரி உள்ளிட்ட வாகனங்களை சாலையோரம் நிறுத்தக் கூடாது என்று சேலம் மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இரவு நேரங்களில், லாரி உள்ளிட்ட பல கனரக வாகனங்களை, ஓட்டுநர்கள் சாலையோரங்களில் நிறுத்திவைப்பதால், மிக மோசமான விபத்துகள் நேரிடுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துவரும் நிலையில், சேலம் மாவட்ட ஆட்சியர், இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இரவு நேரங்களில் சாலையோரம் வாகனங்களை நிறுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, சேலம் மாவட்டம், சங்ககிரியை அடுத்த சின்னாகவுண்டனூர் நான்கு ரோடு பகுதியில் செல்லும் சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் புதன்கிழமை அதிகாலை சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரியின் பின்புறத்தில் ஆம்னி வேன் மோதியதில் வேனில் பயணம் செய்த ஒரு பெண் குழந்தை உள்பட 6 பேர் உயிரிழந்தனர்.

ஈரோடு மாவட்டம், பெருந்துறை, ஈங்கூர், குட்டபாளையம் பகுதியைத் சேர்ந்தவர் கருப்பண்ணன் மகன் பழனிசாமி. இவரது மனைவி பாப்பாத்தி. இவர்களது மகள் பிரியா.  பிரியாவுக்கும் சேலம், கொண்டாலம்பட்டி, காமராஜர் காலனி, மேட்டுத்தெரு பகுதியைச் சேர்ந்த சேலம் மாநகராட்சி ஓட்டுநர் காளியப்பன் மகன் ராஜதுரைக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்று அவர்களுக்கு சஞ்சனா என்ற ஒரு வயது பெண் குழந்தை உள்ளது. செப்.5-ம் தேதி செவ்வாய்க்கிழமை இரவு பழனிசாமி  குடும்பத்தினர், அவரது உறவினர்களுடன்  சேலத்தில் உள்ள  மகள் வீட்டிற்கு வேனில் சென்றுவிட்டு மீண்டும் பெருந்துறைக்கு இவரது மகள், பேத்தியுடன் அனைவரும் திரும்பி கொண்டிருந்துள்ளனர்.

அப்போது சங்ககிரியை அடுத்த சின்னாகவுண்டனூர் நான்கு ரோடு பகுதியில் சேலம்-கோவை தேசியநெடுஞ்சாலையில் செல்லும் போது சாலையோரம் நிறுத்தி வைத்திருந்த லாரியின் பின்புறத்தில் எதிர்பாரதவிதமாக வேன் மோதியது.

இதில் கருப்பண்ணன் மகன் பழனிசாமி (52), இவரது மனைவி பாப்பாத்தி (40), பாப்பாத்தியின் அண்ணன் முத்தான் மகன் ஆறுமுகம் (50), இவரது மனைவி மஞ்சுளா (21), இவர்களது உறவினர் செல்வராஜீ (55), பிரியா, ராஜதுரையின் மகள் சஞ்சனா(1) உள்ளிட்ட ஆறு பேர் பலத்த காயமடைந்ததில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.  மேலும் பழனிசாமி-பாப்பாத்தி மகளும், ராஜதுரை மனைவி பிரியா (25), வேன் ஓட்டுநர் ஆறுமுகம் மகன் விக்னேஷ் (20) ஆகியோர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT