கோப்புப்படம் 
தமிழ்நாடு

வண்டலூர் உயிரியல் பூங்கா கட்டண உயர்வு: செப்.9 முதல் அமல்!

வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்காவில் வரும் சனிக்கிழமை(செப்.9) முதல் புதிய கட்டணமுறை அமல்படுத்தப்படும் என்று பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.

DIN

வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்காவில் வரும் சனிக்கிழமை(செப்.9) முதல் புதிய கட்டணமுறை அமல்படுத்தப்படும் என்று பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.

நான்கு உயிரியல் பூங்காக்களின் நுழைவுக் கட்டணத்தை திருத்தியமைத்த நிலையில் வண்டலூா், கிண்டி உயிரியல் பூங்காக்களில் கட்டணங்கள் உயா்த்தப்பட்டன.

அதன்படி வண்டலூரில் நுழைவுக்கட்டணம் ரூ.115-லிருந்து ரூ.200-ஆக உயா்த்தப்பட்டது. அதே நேரத்தில் வெளிநாட்டினருக்கான நுழைவுக்கட்டணம் ரூ.315 குறைக்கப்பட்டது.

சென்னை கிண்டி குழந்தைகள் பூங்காவுக்கான நுழைவுக் கட்டணம் ரூ.60 ஆகவும், 5 முதல் 12 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு ரூ.10 ஆகவும் அதிகரிக்கப்பட்டது.

இந்த நிலையில், புதிய கட்டணமுறை வரும் செப்டம்பர் 9 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவையில் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: 3 பேர் சுட்டுப் பிடிப்பு

திருச்சி ரயில்வே கோட்டத்துக்கு பாா்சல்கள் மூலம் ரூ. 3.25 கோடி வருவாய்

30 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லை கோவிந்தராஜப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்

உக்ரைனில் ரஷியா ஸ்திர முன்னேற்றம்

வாக்காளா் பட்டியல் எஸ்.ஐ.ஆா் பணிகள்: விவரம்பெற உதவி எண்கள் வெளியீடு

SCROLL FOR NEXT