தமிழ்நாடு

வைகை எக்ஸ்பிரஸ் இனி ஸ்ரீரங்கத்தில் நிற்கும்

வைகை அதிவிரைவு ரயில், இனி திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

DIN

சென்னை: வைகை அதிவிரைவு ரயில், இனி திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

வைகை அதிவிரைவு ரயில் இயக்கப்பட்டது முதல், ஸ்ரீரங்கம் மக்களின் நெடுநாள் கோரிக்கையாக இருந்து வந்தது இன்று தெற்கு ரயில்வேயின் அறிவிப்பினால் நிறைவேறியிருக்கிறது.

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், செப்டம்பர் 16ஆம் தேதி முதல் வைகை அதிவிரைவு ரயில் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் நின்று செல்லும்.

அதுபோல, மலைக்கோட்டை விரைவு ரயில் கல்லக்குடி பழங்காநாத்தம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும்.

மன்னார்குடி - சென்னை எழும்பூர் இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் கொரடாச்சேரி ரயில் நிலையத்தில் நின்று செல்லும்.

மேலும், மயிலாடுதுறை - மைசூரு விரைவு ரயில் புகழுர் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அந்தமான் நிகோபார் தீவுகளுக்கு புயல் எச்சரிக்கை!

இஸ்ரேலில் இருந்து 45 பாலஸ்தீனர்கள் உடல்கள் ஒப்படைப்பு!

சிறப்பு தீவிர திருத்தம்: உச்சநீதிமன்றத்தில் திமுக மனு!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 5 காசுகள் சரிந்து ரூ.88.75 ஆக நிறைவு!

சாரவாக் அழகில்... தமன்னா!

SCROLL FOR NEXT