கோப்புப்படம் 
தமிழ்நாடு

டெங்கு பரவலை தடுக்க நடவடிக்கை வேண்டும்: இபிஎஸ் வலியுறுத்தல்

டெங்கு பரவலை தடுக்க திமுக அரசு நடவடிக்கை வேண்டும் என அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

DIN

டெங்கு பரவலை தடுக்க திமுக அரசு நடவடிக்கை வேண்டும் என அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், சென்னை மதுரவாயல் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த அய்யனார் - சோனியா தம்பதியினரின் நான்கு வயது மகன் ரக்‌ஷன் கடந்த சில நாட்களாக டெங்கு காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த நிலையில் இன்று உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன்.

குழந்தையை இழந்து வாடும் அவரது பெற்றோருக்கும் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

அவர்கள் வசிக்கும் பகுதியில் மழை நீர் தேங்கி உள்ளதாகவும், சுகாதார சீர்கேடு காரணமாகவே சிறுவன் உயிரிழந்ததாகவும் செய்திகள் வருகின்றன. சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் சுகாதார சீர்கேட்டை சரி செய்யாத இந்த திமுக அரசை வன்மையாக கண்டிப்பதுடன், டெங்கு பரவலை முற்றிலும் தடுக்க உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் இந்த அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காந்தியின் பெயரை நீக்கிவிட்டு வடமொழி பெயர் திணிப்பு: முதல்வர் மு.க. ஸ்டாலின்

பாகிஸ்தானில் தலிபான்களுக்கு எதிரான நடவடிக்கை தீவிரம்: 3 பயங்கரவாதிகள் கொலை!

ஆகாஷ் பாஸ்கரன் வழக்கு: மன்னிப்புக் கேட்ட அமலாக்கத்துறை!

பிக் பாஸ் 9: அம்மா, ரசிகர்களிடம் மன்னிப்பு கோரிய நடிகை வியானா!

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் பெயர் மாற்றம்! வலுக்கும் எதிர்ப்பு!

SCROLL FOR NEXT