தமிழ்நாடு

நாகராஜா கோயிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்! 

ஆவணி மாத 4ஆவது ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு நாகர்கோவில் நாகராஜா கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

DIN

நாகர்கோவில்: ஆவணி மாத 4ஆவது ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு நாகர்கோவில் நாகராஜா கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

நாகர்கோவிலில் உள்ள நாகராஜா கோயில் நாக தோஷ பரிகார தலமாக விளங்குகிறது. நாக தோஷம் , கால சர்ப்ப தோஷம், போன்ற தோஷம் உள்ளவர்களும், நீண்ட நாள் திருமணம் ஆகாமல் இருப்பவர்களும் இந்த கோயிலில் உள்ள நாகராஜாவுக்கு பால் அபிஷேகம் செய்தால் தோஷம் நிவர்த்தி ஆகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

இந்த கோயிலில் பொதுவாக ஞாயிற்றுக்கிழமை அதிக அளவில் பக்தர்கள் வந்து வழிபாடு செய்வார்கள். குறிப்பாக ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நாகரை வழிபாடு செய்வார்கள். செப்.10 ஆம் தேதி ஆவணி 4 ஆவது ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு மூலவருக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது. நாகராஜாவை தரிசிக்க காலையிலேயே பக்தர்கள் திரண்டனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து நாகராஜரை தரிசித்தனர்.

மேலும், பக்தர்கள் கோயிலின் முன்புறமுள்ள நாகர் சிலைகளுக்கு பால் அபிஷேகம் செய்தும், மஞ்சள் பொடி தூவியும் வழிபட்டனர். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி,  தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்தும், கேரள மாநிலத்திலிருந்தும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து தரிசனம் செய்தனர்.

கோயில் வளாகத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வாங்கப்பட்டது. இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் பக்தர்களுக்கு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காந்தப் பார்வை... ஸ்ருஷ்டி பன்னாட்டி!

டிஎஸ்பி சிராஜ்..! வெளிநாட்டில் 100 விக்கெட்டுகள்!

3 தேசிய விருதுகள்! பார்க்கிங் படக்குழுவை வாழ்த்திய கமல் ஹாசன்!

நிறைவடையும் தங்க மகள்... மகளே என் மருமகளே தொடரின் ஒளிபரப்பு அறிவிப்பு!

புரியில் 15 வயது சிறுமி மரண வழக்கில் திடீர் திருப்பம்! போலீஸ் விளக்கம்!

SCROLL FOR NEXT