தமிழ்நாடு

அவிநாசியில் ரத்த தானம், இலவச பொது மருத்துவ முகாம்: ஆட்சியர் தொடங்கி வைத்தார்

DIN

அவிநாசி: தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் 37 வது அமைப்பு தினத்தை முன்னிட்டு, அவிநாசியில், ரத்த தானம்,பொது மருத்துவ முகாம் செவ்வாய்க்கிழமை காலை தொடங்கப்பட்டது.

ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம், திருப்பூர் குமரன் மருத்துவமனை ஆகியவை சார்பில் ரத்ததான முகாம் இலவச பொது மருத்துவ முகாம் அவிநாசி சேவூர் சாலை தனியார் திருமண மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 

இந்த முகாமை மாவட்ட ஆட்சித் தலைவர் தா. கிறிஸ்துராஜ் தொடங்கி வைத்தார். ஊரக வளர்ச்சித் துறை மாவட்ட தலைவர் டி. சாந்தி தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் எஸ். ரமேஷ், மாவட்ட துணைத் தலைவர் பி .ரமேஷ் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

மாவட்ட செயலாளர் செந்தில்குமார் வரவேற்றார். காலை முதல் மாலை வரை நடைபெற உள்ள இந்த முகாமில் ரத்த தானம், இலவச கண் சிகிச்சை, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இசிஜி, எக்கோ ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாடாளுமன்ற ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாதவர்களுடன் கூட்டணி இல்லை:சரத் பவார்

இரவு 8 மணிக்குமேல்...: தமன்னாவின் மோசமான பண்பு என்ன தெரியுமா?

தமிழகத்தில் 5 நாள்களுக்கு கனமழை எச்சரிக்கை!

ஒவ்வொரு நாளும் போராட்டமாக இருந்தது; டி20 உலகக் கோப்பையில் இடம்பிடித்த இந்திய வீரர் பேச்சு!

கன்னக்குழி அழகே..!

SCROLL FOR NEXT