தமிழ்நாடு

செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

DIN

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய 8 இடங்களில் அமலாக்க்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. சென்னை நுங்கம்பாக்கம், அண்ணாநகர் உள்ளிட்ட 8 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

நுங்கம்பாக்கத்தில் உள்ள செந்தில் பாலாஜியின் நண்பர் வீட்டிலும் அமலாக்க்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. 

சட்டவிரோத பணப் பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் அமைச்சா் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினா் கடந்த ஜூன் 14 -ஆம் தேதி கைது செய்தனா். இந்த வழக்கில் செந்தில் பாலாஜிக்கு எதிராக சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் ஆக.12-ஆம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

சட்டவிரோதப் பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சா் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி தாக்கல் செய்துள்ள மனு தொடா்பாக அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து, வரும் வெள்ளிக்கிழமைக்குள் அமலாக்கத் துறை பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை செப். 15-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

இதையும் படிக்க: மேட்டூர் அணை நிலவரம்!

இந்த நிலையில், அமலாக்கத்துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய 8 இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.

சட்டவிரோத சுரங்க முறைகேட்டில் ஈடுபட்டதாக வந்த புகாரில் இந்த சோதனை நடைபெறுவதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீனம்மா... மீனம்மா...

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ தேரோட்டம்

வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு!

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

SCROLL FOR NEXT