தமிழ்நாடு

மகளிர் உரிமைத்தொகை: வங்கிக் கணக்கில் ரூ.1 அனுப்பி பரிசோதனை!

DIN


மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் சோதனை முயற்சியாக மகளிர் வங்கி கணக்கிற்கு ஒரு ரூபாய் அனுப்பி சோதனை முயற்சி நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 

கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்துதின்கீழ் 1.6 கோடி பணியாளர்கள் இறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், ஆயிரம் ரூபாய் வழங்க பரிசோதனை முயற்சி தொடங்கி நடைபெற்று வருகிறது. 

தகுதி வாய்ந்த பெண்களுக்கு அவரவர் வங்கிக் கணக்கில் செப்டம்பர் முதல் ரூ.1,000 கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். 

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என ஆட்சியர்களுக்கு முதல்வர் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. 
மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தில் விடுபட்டவர்கள் அல்லது தேர்வு செய்யப்படாதவர்கள், செப்டம்பர் 15ஆம் தேதி நடக்கும் மகளிர் உரிமைத் தொகைத்திட்ட தொடக்க நிகழ்ச்சியில், அதிகாரிகளைத் தொடர்புகொண்டு தெரிவிக்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை: பவுனுக்கு ரூ.200 குறைவு

அடுத்த 2 மணி நேரத்துக்கு 9 மாவட்டங்களில் மழை!

சக்தி வாய்ந்த நாடாக இந்தியா வளர்ந்து வருவதை பாகிஸ்தான் தலைவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்: ராஜ்நாத் சிங்

குலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா: டிட்கோ அதிகாரபூர்வ அறிவிப்பு

மகாராஷ்டிரத்தில் இன்று பாஜக பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

SCROLL FOR NEXT