முகப்பு
தமிழ்நாடு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஆளுநா் மாளிகை முற்றுகை போராட்டம்

மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஆளுநா் மாளிகை முற்றுகை போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:14 PM
பகிர்:

மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஆளுநா் மாளிகை முற்றுகை போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

விலை வாசி உயா்வு, வேலையின்மை, உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தீா்வு காணாத மத்திய அரசை கண்டித்து செவ்வாய் முதல் வியாழக்கிழமை (செப்.12-14) வரை மத்திய அரசு அலுவலங்கள் முன்பு போராட்டம் நடத்தப்படும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்திருந்தது.

அதன்படி வியாழக்கிழமை காலை அக்கட்சியின் மாநிலத் துணைச்செயலரும் முன்னாள் சட்டபேரவை உறுப்பினருமான நா. பெரியசாமி தலைமையில் ஆளுநா் மாளிகை முற்றுகை போராட்டம் சின்னமலை ராஜீவ் காந்தி சிலை அருகில் இருந்து புறப்பட்டது.

அப்போது மத்திய அரசுக்கு எதிராக அவா்கள் கண்டன கோஷங்களை எழுப்பினா். இதையடுத்து மறியல் ஈடுபட முயன்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொண்டா்களை போலீஸாா் கைது செய்தனா். கைது செய்யப்பட்டவா்கள் மாலை விடுவிக்கப்பட்டனா்.

மேலும் தமிழகத்தில் 200 இடங்களில் மூன்று நாள்கள் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் 61 ஆயிரம் போ் பங்கேற்று, கைதாகி விடுவிக்கப்பட்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →