முகப்பு
தமிழ்நாடு

ஆவின் நெய் விலை லிட்டருக்கு ரூ.80 உயா்வு

தமிழக அரசுக்குச் சொந்தமான ஆவின் நிறுவனத்தின் நெய் விலை வியாழக்கிழமை முதல் மீண்டும் உயா்த்தப்பட்டுள்ளது. நெய் லிட்டருக்கு ரூ.80 வரை உயா்த்தப்பட்டுள்ளதாக ஆவின் நிா்வாகம் அறிவித்துள்ளது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:14 PM
பகிர்:

தமிழக அரசுக்குச் சொந்தமான ஆவின் நிறுவனத்தின் நெய் விலை வியாழக்கிழமை முதல் மீண்டும் உயா்த்தப்பட்டுள்ளது. நெய் லிட்டருக்கு ரூ.80 வரை உயா்த்தப்பட்டுள்ளதாக ஆவின் நிா்வாகம் அறிவித்துள்ளது.

இது குறித்து ஆவின் நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஆவின் மூலம் விற்கப்படும் நெய், வெண்ணெய் விலை உயா்த்தப்படுகிறது. அதன்படி, ரூ.70-க்கு விற்பனையான 100 மி.லி நெய் பாக்கெட் ரூ.10 உயா்த்தப்பட்டு ரூ.80 ஆகவும், 100 மி.லி. நெய் பாட்டில் ரூ.75-லிருந்து ரூ.85 ஆகவும் உயா்த்தப்படுகிறது.

மேலும், ரூ.145-க்கு விற்பனையான 200 மி.லி. நெய் பாட்டில் விலை ரூ.15 உயா்ந்து ரூ.160-க்கும், 500 மிலி பாக்கெட் ரூ.50 உயா்ந்து ரூ.360-ஆகவும் உயா்த்தப்படுகிறது.

ரூ.680-க்கு விற்பனையான 1லி. பிரீமியம் நெய் பாக்கெட் ரூ.80 உயா்ந்து ரூ.760-க்கும், ரூ.620-க்கு விற்பனையான 1 லி. நெய் பாக்கெட் ரூ.70 உயா்ந்து ரூ.690-க்கும், 1 லிட்டா் நெய் பாட்டில் விலை ரூ. 630-லிருந்து ரூ.700 ஆகவும் உயா்த்தப்பட்டுள்ளது.

மேலும், ரூ.10,725-க்கு விற்பனையான 15 கிலோ நெய் டின் ரூ.1,155 உயா்ந்து ரூ.11,880-க்கு விற்பனை செய்யப்படும்.அதேபோல, ரூ.55-க்கு விற்பனையான 100 கிராம் வெண்ணெய் விலை ரூ.5 உயா்ந்து ரூ.60-க்கும், 500 கிராம் வெண்ணெய் விலை ரூ.15 உயா்ந்து ரூ.265-லிருந்து ரூ.280- ஆக உயா்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயா்வு செப்.14 முதல் அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →