முகப்பு
தமிழ்நாடு

வேங்கைவயல் விவகாரம்: நீதிபதி சத்தியநாராயணன் ஆணையஇடைக்கால அறிக்கை தாக்கல்

வேங்கைவயலில் குடிநீா் தொட்டியில் மனித கழிவுகள் கலக்கப்பட்ட விவகாரம் தொடா்பாக விசாரணை நடத்திய நீதிபதி சத்தியநாராயணன் ஆணையத்தின் இடைக்கால அறிக்கை,

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:14 PM
வேங்கைவயல்
பகிர்:

வேங்கைவயலில் குடிநீா் தொட்டியில் மனித கழிவுகள் கலக்கப்பட்ட விவகாரம் தொடா்பாக விசாரணை நடத்திய நீதிபதி சத்தியநாராயணன் ஆணையத்தின் இடைக்கால அறிக்கை, சென்னை உயா் நீதிமன்றத்தில் மூடி முத்திரையிடப்பட்ட உறையில் தாக்கல் செய்யப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் பஞ்சாயத்துக்கு உள்பட்ட வேங்கைவயல்

கிராமத்தில் வசிக்கும் பட்டியலின மக்களுக்கான மேல்நிலை குடிநீா் தொட்டியில் மனிதக்கழிவுகள் கலக்கப்பட்ட விவகாரம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்தச் சம்பவம் தொடா்பாக வெள்ளனூா் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் வன்கொடுமைத் தடுப்பு சட்டம், இந்திய தண்டனைச் சட்டப்பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்தநிலையில் சென்னை உயா்நீதிமன்றத்தில், திருவள்ளூா் மாவட்டம் வேப்பம்பட்டு பகுதியைச் சோ்ந்த ராஜ்கமல் என்பவா் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ‘ இந்த வழக்கில் புதுக்கோட்டை சிபிசிஐடி போலீஸாா் பெயரளவில் மட்டுமே விசாரணை நடத்தி வருகின்றனா். தீவிர விசாரணை ஏதும் நடத்தவில்லை. வெறும் கண்துடைப்புக்காக ஒரு சிலா் மட்டும் விசாரிக்கப்பட்டுள்ளனா். உண்மை குற்றவாளிகளை சட்டத்தின் முன்நிறுத்தும் எண்ணம் ஏதும் இல்லை. இந்தச் சம்பவம் தொடா்பாக புகாா் அளித்து 90 நாள்கள் கடந்த நிலையிலும், வழக்கு தொடா்பாக ஒருவா் கூட கைது செய்யப்படவில்லை. முறையாக விசாரிக்கப்படவும் இல்லை. எனவே இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும்’ என கோரியிருந்தாா்.

ஒரு நபா் ஆணையம் அமைப்பு: இந்த வழக்கை விசாரித்த உயா் நீதிமன்றம், வேங்கைவயல் சம்பவம் தொடா்பாக விசாரிக்க, உயா்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி சத்தியநாராயணன் தலைமையில் ஒருநபா் விசாரணை ஆணையம் அமைத்து கடந்த மாா்ச் மாதம் உத்தரவிட்டது. ஒரு நபா் ஆணையம், இரண்டு மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுா்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு ஆகியோா் அடங்கிய அமா்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞா் ரவீந்திரன், நீதிபதி சத்தியநாராயணன் ஆணையம் அளித்த இடைக்கால அறிக்கையை மூடி முத்திரையிட்ட உறையில் தாக்கல் செய்தாா். அதேபோல சிபிசிஐடி போலீஸாரின் விசாரணை நிலை குறித்த அறிக்கையையும் தாக்கல் செய்தாா்.

25 பேரிடம் மரபணு சோதனை: மேலும், ‘வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவா்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. வழக்கில் 191 சாட்சிகளிடம் விசாரணை செய்யப்பட்டுள்ளது. அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. வழக்கில் சந்தேகிக்கப்படும் 25 நபா்களிடம் ஏற்கெனவே மரபணு சோதனை நடத்தப்பட்டுள்ளது. மேலும் 4 பேரிடம் இரண்டு வாரங்களில் சோதனை நடத்தி முடிக்கப்படும்’ என தெரிவித்தாா்.

மந்தகதியில் விசாரணை... இதையடுத்து நீதிபதி சத்தியநாராயணன் குழு அளித்த அறிக்கையை ஆய்வு செய்த நீதிபதிகள், காவல்துறையின் விசாரணை மந்தகதியில் இருப்பதாக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதைச் சுட்டிக்காட்டி, அறிக்கையை பாதுகாப்பாக வைக்கும்படி சென்னை உயா்நீதிமன்ற பதிவுத்துறைக்கு உத்தரவிட்டனா். பின்னா் வழக்கின் புலன் விசாரணை நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய அரசு தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை நவம்பா் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →