நாமக்கல் அரசு மருத்துவமனை வளத்தில் பதற்றத்துடன் நின்ற பெற்றோர்கள். 
தமிழ்நாடு

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 11 பேருக்கு வாந்தி, மயக்கம்

கெட்டுப்போன இறைச்சி உணவை சாப்பிட்ட, நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.

DIN

நாமக்கல்: கெட்டுப்போன இறைச்சி உணவை சாப்பிட்ட, நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் மாணவி ஒருவருக்கு நேற்று (சனிக்கிழமை) பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். இதனையொட்டி அவருடைய நண்பர்கள் 10 பேர் நாமக்கல் - பரமத்தி சாலையில் உள்ள தனியார் அசைவ உணவகத்தில் நேற்று (சனிக்கிழமை) மாலை சவர்மாவை சாப்பிட்டு உள்ளனர். 

இந்த நிலையில், இன்று காலை திடீரென 11 பேருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து விடுதி ஊழியர்கள் அவர்களை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நாமக்கல் ஆட்சியர் ச.உமா மாணவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

இதுகுறித்து நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் சாந்தா அருள்மொழி கூறியதாவது: 

மாணவி ஒருவர் பிறந்த நாளை ஒட்டி 11 பேர் தனியார் உணவகத்தில் சவர்மா சாப்பிட்டு உள்ளனர். அது அவர்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தி உள்ளதால், அனைவருக்கும் உடல்நல குறைவு ஏற்பட்டது. அனைவரும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர்கள் நலமுடன் உள்ளனர்.

இது குறித்து 11 மாணவ, மாணவிகளின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வந்தவாசியில் ரக்சா பந்தன் விழா

மிதமாக அதிகரித்த தேயிலை ஏற்றுமதி

திருச்சி மாநகரில் பலத்த மழை

கெங்கவல்லியில் பெரியாா் பிறந்தநாள்: சமூகநீதி உறுதிமொழி ஏற்பு

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் ‘சமூக நீதி நாள்’ உறுதிமொழியேற்பு

SCROLL FOR NEXT