தமிழ்நாடு

விநாயகர் சதுர்த்தி: புலியகுளம் விநாயகர் சிலைக்கு 4 டன் மலர்களால் அலங்காரம்!

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆசியாவிலேயே 2 ஆவது உயரமான கோவை புலியகுளம் பகுதியில் உள்ள முந்தி விநாயகர் கோயில் விநாயகர் சிலை நான்கு டன் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

DIN

கோவை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆசியாவிலேயே 2 ஆவது உயரமான கோவை புலியகுளம் பகுதியில் உள்ள முந்தி விநாயகர் கோயில் விநாயகர் சிலை நான்கு டன் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் இன்று பல்வேறு இடங்களில் விநாயகர் சதுர்த்தி விழா உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. சில இடங்களில் நாளை விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது.  இதன் ஒரு பகுதியாக கோவை புலியகுளம் பகுதியில் உள்ள முந்தி விநாயகர் கோயிலில் திங்கள்கிழமை விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு அதிகாலை முதலே பல்வேறு அலங்காரங்களால் பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. 

திங்கள்கிழமை சந்தனகாப்பு அலங்காரம் செய்யபட்டு 4 டன் மலர்களால் சிலை அலங்கரிக்கப்பட்டுள்ளது.

புலியகுளம் விநாயகர் சிலை ஆசியாவிலேயே இரண்டாவது மிக உயரமான சிலையாகும். இதன் உயரம் 19 அடி, அகலம் 10 அடி, எடை 190 டன் என்பது குறிப்பிடத்தக்கது. 

திங்கள்கிழமை காலை முதல் ஏராளமான பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். மேலும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவையில் 1,500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர். 

இதேபோல் ஈச்சனாரி விநாயகர் கோயிலிலும் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆகஸ்ட் மாத எண்கணித பலன்கள் - 2

ஆகஸ்ட் மாத எண்கணித பலன்கள் - 1

இன்டர்நேஷ்னல் பீர் டே... திவ்ய பிரபா!

நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட தொடக்க விழா! மேடையில் M.L.A. - M.P. வாக்குவாதம்!

ஒரே ஓவரில் 45 ரன்கள்... 43 பந்தில் 153 ரன்கள் குவித்த ஆப்கன் வீரர்!

SCROLL FOR NEXT