கொள்ளை சம்பவம் நடைபெற்ற டாஸ்மாக் கடை 
தமிழ்நாடு

விராலிமலை அருகே டாஸ்மாக் கடையில் பூட்டை உடைத்து கொள்ளை

விராலிமலை அருகே டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து உள்ளிருந்த ரூ.4, 83,390 பணத்தை கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றுவிட்டதாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. 

DIN

விராலிமலை: விராலிமலை அருகே டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து உள்ளிருந்த ரூ.4, 83,390 பணத்தை கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றுவிட்டதாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. 

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள மலைக்குடிபட்டி- தென்னலூர் சாலையில் 6647 என்ற எண் கொண்ட டாஸ்மாக் கடை இயங்கி வருகின்றது. வழக்கம்போல வியாபாரத்தை முடித்துவிட்டு ஞாயிற்றுக்கிழமை இரவு ஊழியர்கள் வியாபாரமான தொகையை கடைக்கு உள்ளே இருக்கும் லாக்கரில் வைத்து பூட்டிவிட்டு சென்றுள்ளனர்.

கொள்ளை சம்பவம் நடைபெற்ற டாஸ்மாக் கடையில்போலீசார் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்த நிலையில் திங்கள்கிழமை காலை அப்பகுதி வழியாக சென்ற சிலர் கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

இதையடுத்து சம்பவ இடத்திற்கு  வந்த போலீசார் கடையின் உள்ளே சென்று பார்த்தபோது, உள்ளே லாக்கர் உடைக்கப்பட்டு உள்ளிருந்த ரூ.4, 83,390 கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.

இது குறித்த புகாரின் பேரில் இலுப்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அவ தான் என்னவ... 🌹🌹😘 கௌரி கிஷன்

இந்தியா வருகிறார் தலிபான் அரசின் வெளியுறவு அமைச்சர்!

கொஞ்சும் எழிலிசையே.. அனு!

பாஜகவின் தூண்டுதலில் விஜய் அரசியலுக்கு வந்துள்ளார் - திருமா | Vck | TVK | Karur

திமுகவிற்கும் விஜய்க்கும் Underground dealing ஆ? - திருமா | TVK | VCK | Karur

SCROLL FOR NEXT