தீண்டாமை எங்கு நடந்தாலும் தவறுதான்: உதயநிதி
தமிழ்நாட்டில் மட்டுமல்ல சாதிய தீண்டாமை எங்கு நடந்தாலும் தவறுதான் என விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், சாதியை ஒழிக்கத்தான் தாங்கள் போராடி வருவதாகவும் குறிப்பிட்டார்
தமிழ்நாட்டில் மட்டுமல்ல சாதிய தீண்டாமை எங்கு நடந்தாலும் தவறுதான் என விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், சாதியை ஒழிக்கத்தான் தாங்கள் போராடி வருவதாகவும் குறிப்பிட்டார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்த கருத்து அவர்கள் கட்சி சார்ந்தது. அதில் நான் தலையிட விரும்பவில்லை.
சநாதனத்தை எதிர்க்க தொடர்ந்து குரல் கொடுப்பேன். சமத்துவம் வேண்டி திமுக தொடர்ந்து பாடுபட்டு வருகிறது. மேலும், அடுத்த 25 ஆண்டுகளுக்கான போக்குவரத்து திட்டத்தை உருவாக்கும் வகையில் பொதுமக்கள் தயக்கம் காட்டாது கருத்துக்களை தெரிவிக்க வேண்டும்.
Advertisement
Advertisement
அதன் அடிப்படையில், அடுத்த 25 ஆண்டுகளில் போக்குவரத்து கட்டமைப்புகளை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கும் எனக் குறிப்பிட்டார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.