தமிழ்நாடு

தமிழக சட்டப்பேரவை அக். 9-ல் கூடுகிறது!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் அக்டோபர் 9-ம் தேதி கூடவுள்ளதாக பேரவைத் தலைவா் மு.அப்பாவு தெரிவித்துள்ளார். 

DIN

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் அக்டோபர் 9-ம் தேதி கூடவுள்ளதாக பேரவைத் தலைவா் மு.அப்பாவு தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில், 

2023-ஆம் ஆண்டின் இரண்டாவது கூட்டத்தொடா் அக்.9-ல் கூடுகிறது. தலைமைச் செயலகத்தில் உள்ள பேரவை மண்பட கூட்டரங்கில் காலை 10 மணிக்கு கூட்டம் நடைபெறுகிறது என்று தெரிவித்தார்.

மேலும் பேசுகையில், மகளிர் இடஒதுக்கீடு எப்போது அமலுக்கு வரும் என்பது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது, 2014-ம் ஆண்டிலேயே மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை ஏன் தாக்கல் செய்யவில்லை? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். 

2023-24-ம் ஆண்டில் கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கைகள் அக்.9 பேரவையில் தாக்கல் செய்யப்படவுள்ளது. சட்டப்பேரவை கூட்டத் தொடரை எத்தனை நாள்களுக்கு நடத்துவது என்பது குறித்து அன்றைய தினம் நடைபெறும் அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட உள்ளதாகவும் பேரவைத் தலைவா் கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொஞ்சும் எழிலிசையே.. அனு!

பாஜகவின் தூண்டுதலில் விஜய் அரசியலுக்கு வந்துள்ளார் - திருமா | Vck | TVK | Karur

திமுகவிற்கும் விஜய்க்கும் Underground dealing ஆ? - திருமா | TVK | VCK | Karur

கார்கால சிலிர்ப்புகள்... குஷி கபூர்!

அப்பாவித்தனமான முகம் ஷுப்மன் கில்லை காப்பாற்றியது: அபிஷேக் சர்மா

SCROLL FOR NEXT