தமிழ்நாடு

ரூ.1,000 வந்தாச்சு.. ரூ.15 லட்சம் என்னாச்சு? சுட்டிக்காட்டிய ஸ்டாலின்

முதல்வர் சொன்ன ரூ.1,000 வந்தாச்சு.. பிரதமர் சொன்ன ரூ.15 லட்சம் என்னாச்சு? என்று பெண் ஒருவர் கேள்வி எழுப்பியதாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.

DIN


சென்னை: தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், முதல்வர் சொன்ன ரூ.1,000 வந்தாச்சு.. பிரதமர் சொன்ன ரூ.15 லட்சம் என்னாச்சு? என்று பெண் ஒருவர் கேள்வி எழுப்பியதாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.

அண்மையில், இந்தியாவின் குரல் என்ற தலைப்பில், முதல்வர் ஸ்டாலின் ஒரு விடியோ வெளியிட்டிருந்தார். அதில், மத்தியில் ஆளும் பாஜக அரசு குறித்த குற்றச்சாட்டுகளை குறிப்பிட்டிருந்தார்.

அந்த வகையில், சனிக்கிழமை காலை, இரண்டாவது விடியோவை ஸ்டாலின் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருக்கிறார்.

அந்த விடியோவில், முதல் விடியோ வெளியிடப்பட்ட பிறகு, தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை அறிமுகப்படுத்திய பிறகு இந்த விடியோவை வெளியிடுகிறேன்.

மகளிர் உரிமைத் தொகை திட்டம் அறிமுகப்படுத்திய போது, தமிழகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் இவ்வாறு குறிப்பிட்டிருப்பதை இங்கே நான் பதிவு செய்கிறேன் என்று கூறிய முதல்வர், எங்கள் முதல்வர் சொன்ன கலைஞர் மகளிர் உரிமைத் தொகை மாதம் ரூ.1,000 வங்கிக் கணக்கில் வந்தாச்சு. பிரதமர் மோடி சொன்ன ரூ.15 லட்சம் ரூபாய் எப்ப வரும்? என்று கேட்டிருந்தார். இது சமூக வலைத்தளங்களிலும் வைரலானதாக ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் விடியோவில் பேசுகையில், கடந்த 2014, 2019ஆம் ஆண்டுகளைப் போல, வரும் 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலிலும் மக்கள் ஏமாந்துவிடக் கூடாது. 2024ஆம் ஆண்டு தேர்தலில் பாஜக ஒட்டுமொத்தகமாக வீழ்த்தப்பட வேண்டும்.

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரில், ரூ.7.5 லட்சம் கோடி முறைகேடு குறித்து ஏன் விவாதிக்கவில்லை? சிஎஜி அறிக்கை குறித்து ஏன் விவாதிக்கவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார். சிஏஜி அறிக்கை, மத்திய அரசின் முறைகேடுகளை அம்பலப்படுத்தியிருக்கிறது. 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த பாஜக, நாட்டை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்லவில்லை. 

வாய்க்குள் நுழையாத பெயர்களை திட்டங்களாக வைக்கிறது பாஜக அரசு. 60 மாதங்கள் கொடுங்கள், இந்தியாவை வளர்ச்சி மிகுந்த நாடாக மாற்றுவேன் என்று கூறிய மோடி, தற்போது இந்தியாவை வளர்ச்சி மிகுந்த நாடாக மாற்றிவிட்டாரா? இந்தக் கேள்விக்கு அவர் பதிலளிக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் பேசியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புற்றுநோய், அத்தியாவசிய மருந்துகளுக்கு ஜிஎஸ்டி குறைப்புக்கு ஐஎம்ஏ வரவேற்பு

அனைத்து பயிா்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையை நிா்ணயம் செய்ய வேண்டும்

பிரதமரேயாானாலும் ராஜிநாமா செய்ய வேண்டும்: அரசியலமைப்புத் திருத்த மசோதா குறித்து அமித் ஷா விளக்கம்

பாதை தவறுகிறோம்...

யுஎஸ் ஃபெடரல் மீதான எதிா்பாா்ப்பு: பங்குச்சந்தையில் எழுச்சி!

SCROLL FOR NEXT