தமிழ்நாடு

நெல்லை -சென்னை வந்தே பாரத் ரயில் சேவை: ஆளுநர் தமிழிசை, எல் முருகன் பயணம்

திருநெல்வேலி- சென்னை இடையிலான வந்தே பாரத் விரைவு ரயில் சேவையை பிரதமர் மோடி காணொலிக் காட்சி மூலம் ஞாயிற்றுக்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தார். 

DIN


திருநெல்வேலி: திருநெல்வேலி- சென்னை இடையிலான வந்தே பாரத் விரைவு ரயில் சேவையை பிரதமர் மோடி காணொலிக் காட்சி மூலம் ஞாயிற்றுக்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தார். 

திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் நடைபெற்ற தொடக்க விழாவில் தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன், மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் திருநெல்வேலி மக்களவை உறுப்பினர் ஞானதிரவியம், திருநெல்வேலி சட்டப்பேரவை உறுப்பினர் நயினார் நாகேந்திரன், பாளையங்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் அப்துல் வகாப், மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் டிபிஎம் மைதீன் கான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

திருநெல்வேலியில் இருந்து சென்னை நோக்கி புறப்பட்ட இந்த ரயிலில் தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் மதுரை வரை பயணிக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராகுல் காந்தி நாளை காலை செய்தியாளர்களுடன் சிறப்புச் சந்திப்பு: என்ன சொல்லப் போகிறார்?

சமதா இஷ்டி யாகத்துக்கான கலசங்கள் ஒப்படைப்பு

பனித்துளி... பிரியங்கா மோகன்!

செவ்வானம்... திவ்ய பாரதி!

மேகம்... ரித்திகா நாயக்!

SCROLL FOR NEXT