கோப்புப்படம் 
தமிழ்நாடு

உலகத் தமிழாராய்ச்சி நிறுவன நூல்கள் 30-50 சதவீத தள்ளுபடியில் விற்பனை!

அண்ணாவின் பிறந்தநாளையொட்டி வருகிற அக்டோபர் 15 ஆம் தேதி வரை 30 முதல் 50 சதவீத தள்ளுபடி விலையில் உலகத்  உலகத் தமிழாராய்ச்சி நிறுவன நூல்கள் விற்பனை செய்யப்படுகின்றன. 

DIN

உலகத் தமிழாராய்ச்சி நிறுவன நூல்கள் 30-50 சதவீத தள்ளுபடி விலையில்... 

அண்ணாவின் பிறந்தநாளையொட்டி வருகிற அக்டோபர் 15 ஆம் தேதி வரை 30 முதல் 50 சதவீத தள்ளுபடி விலையில் உலகத்  உலகத் தமிழாராய்ச்சி நிறுவன நூல்கள் விற்பனை செய்யப்படுகின்றன. 

இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ள இலக்கணம், இலக்கியம், மருத்துவம், காலக்கணிதம் ஆகியப் பொருண்மைகளில் அமைந்த நூல்கள் மற்றும் அரிய நூல்கள், பாரதியார் சித்திரக் கதைகள், பாரதி வாழ்க்கை வரலாறு, அரசுப் போட்டித் தேர்வுகளுக்கான கருவி நூல்கள் ஆகியன தமிழ் ஆய்வினை மேற்கொள்ளும் மாணவர்கள், தமிழார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அண்ணாவின் பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில் 2023 செப்டம்பர் 15 ஆம் நாள் முதல் அக்டோபர் 15ஆம் நாள் வரை 30 முதல் 50 விழுக்காடு கழிவு விலையில் விற்பனை செய்யப்படவுள்ளது.

நூல் விற்பனை நாள்தோறும் காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை நிறுவன வளாகத்தில் நேரடியாக நடைபெறும். எழும்பூரிலுள்ள தமிழ் வளர்ச்சி இயக்ககத்தில் அமைக்கப்பட்டுள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவன நூல் விற்பனை நிலையத்திலும் நடைபெறும். நூல்கள் பற்றிய விவரங்கள் அறிய www.ulakaththamizh.in என்ற இணைய முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.

இணைய வழியில் (Internet Banking) தொகை செலுத்தும் முறை 

வங்கி கணக்கு பெயர் – INTERNATIONAL INSTITUTE OF TAMIL STUDIES
கணக்கு எண்         – 33068172999
ஐஎப்எஸ்சி(IFSC) குறியீடு எண்  – SBIN0013361

இந்த அரிய வாய்ப்பினை அனைவரும் பயன்படுத்திக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

மேலும் விவரங்களுக்கு,

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
இரண்டாம் முதன்மைச் சாலை, மையத் தொழில்நுட்பப்
பயிலக வளாகம் தரமணி, சென்னை – 600 113.
தொடர்புக்கு – 044- 22542992, 044 – 22541436 / 9600021709. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் செய்ய வேண்டியது

தைபேயில் கத்திக் குத்து தாக்குதல்: 9 பேர் காயம்

2025 தேர்தல்கள்: பாஜகவின் அமோக வெற்றியும் காங்கிரஸின் ஆறுதல் வெற்றியும்!

பிரதமர் மோடி நாளை மே.வங்கம், அசாம் பயணம்!

கடைசி டி20: இந்தியா பேட்டிங்; பிளேயிங் லெவனில் சஞ்சு சாம்சன்!

SCROLL FOR NEXT