முகப்பு
தமிழ்நாடு

காஞ்சிபுரத்தில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும்!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் என மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு விடுத்துள்ளது.

Updated On : 26 செப்டம்பர் 2023, 8:44 am IST
கோப்புப்படம்
பகிர்:

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் என மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு விடுத்துள்ளது.

ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை தொடக்கப் பள்ளிகளுக்கு இன்று ஒரு நாள் விடுமுறை அளித்து  மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

வடதமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

Advertisement

Advertisement

மேலும், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாகவும், செப்.26(இன்று) தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments