பெத்தநாயக்கன்பாளையத்தில் மாநாட்டு திடலை பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டிய அளித்த உதயநிதி ஸ்டாலின். 
தமிழ்நாடு

கர்நாடக மக்களின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

முதல்வரின் உருவப்படத்தை வைத்து விரும்பத்தகாத செயலில் ஈடுபட்ட கர்நாடக அமைப்பினரின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

DIN

சேலம்: முதல்வரின் உருவப்படத்தை வைத்து விரும்பத்தகாத செயலில் ஈடுபட்ட கர்நாடக அமைப்பினரின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

சேலம் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சேலம் வந்த இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புதன்கிழமை பெத்தநாயக்கன்பாளையத்தில் திடலை பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: 

முதல்வரின் உருவப்படத்தை வைத்து விரும்பத்தகாத செயலில் ஈடுபட்ட கர்நாடக அமைப்பினரின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.

அதிமுக-பாஜக கட்சிகளுக்கு இடையே பிளவு ஏதும் இல்லை; அவர்கள் நடிக்கிறார்கள். 

திமுக கூட்டணி ஒரு கொள்கை கூட்டணி. மகளிர் உரிமைத்தொகை பெறும் பயனாளிகள் மிகுந்த மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவிக்கின்றனர்

சேலம் இளைஞர் அணி மாநாடு இந்தியாவிலேயே இதுவரை நடந்திராத வகையில் இருக்கும். சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் மூன்று லட்சம் பேர் அமரக்கூடிய அளவில் மாநாட்டுகான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இளைஞரணி மாநாட்டில் திராவிட இயக்கத்தின் கொள்கைகள், வரலாறுகள் மற்றும் அரசின் சாதனைகள் குறித்து பேசப்படும் என்று உதயநிதி தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரயில்வேகேட் பராமரிப்பு பணி

ஆரணியில் மாற்றுத்திறனாளிகள் ஆா்ப்பாட்டம்

கொசு உற்பத்தியாகும் பொருட்கள் அழிப்பு

கொலை வழக்கில் தாய், தந்தை, மகனுக்கு ஆயுள் தண்டனை

திருமருகல் அருகே விழிப்புணா்வு முகாம்

SCROLL FOR NEXT