முகப்பு
தமிழ்நாடு

திருமாவளவனிடம் நலம் விசாரித்த இபிஎஸ்!

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனை தொடர்பு கொண்டு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நலம் விசாரித்தார்.

தமிழ்நாடு

திருமாவளவனிடம் நலம் விசாரித்த இபிஎஸ்!

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனை தொடர்பு கொண்டு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நலம் விசாரித்தார்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:02 AM
பகிர்:

சென்னை: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனை தொடர்பு கொண்டு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி புதன்கிழமை நலம் விசாரித்தார்.

கடுமையான காய்ச்சல் மற்றும் உடல் சோா்வு காரணமாக சென்னை, வடபழனியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு திருமாவளவன் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திருமாவளவனை கைப்பேசியில் தொடர்பு கொண்டு இன்று காலை எடப்பாடி பழனிசாமி நலம் விசாரித்துள்ளார்.

முன்னதாக செவ்வாய்க்கிழமை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்திருந்தார்.

பாஜகவுடனான கூட்டணியில் இருந்து விலகிய அதிமுக, புதிய கூட்டணியை அமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வரும் நிலையில் எடப்பாடி பழனிசாமி, திருமாவளவனின் பேச்சு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →