தமிழ்நாடு

கிருஷ்ணகிரி அருகே இடி தாக்கியதில் தென்னை மரம் எரிந்து நாசம்: விடியோ வைரல்

கிருஷ்ணகிரி அருகே இடி தாக்கியதில் தென்னை மரம் முற்றிலும் எரிந்து நாசமான விடியோ சமூக வலைதங்களில் வைரலாகி வருகிறது.

DIN

கிருஷ்ணகிரி அருகே இடி தாக்கியதில் தென்னை மரம் முற்றிலும் எரிந்து நாசமான விடியோ சமூக வலைதங்களில் வைரலாகி வருகிறது.

வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 6 நாள்கள் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. 

அதன்படி, தமிழ்நாட்டில் செவ்வாய்க்கிழமை பரவலாக இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்தது. 

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இரவு பலத்த சத்தத்துடன் இடி மழை பெய்தது.

இந்த நிலையில் கிருஷ்ணகிரியை அடுத்த கட்டிகானப்பள்ளி கிராமம், திருமலை நகரில் உள்ள தென்னை மரத்தில் இரவு 10 மணியளவில் இடி தாக்கியதில் தென்னை மரம் தீப்பிடித்து எரிந்து முற்றிலும் நாசமானது.

தென்னை மரத்தில் இடி தாக்கியது, மரம்  தீப்பிடித்து எரிந்த விடியோ பதிவு சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண்கவிக் களஞ்சியம்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்கள் வரலாறு; பாகம்-1

வரப்பெற்றோம் (20-10-2025)

விராலிமலை முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா கொடியேற்றம்!

ஹெலிபேட் கான்கிரீட்டில் சிக்கிய குடியரசுத் தலைவர் ஹெலிகாப்டர்!

SCROLL FOR NEXT