முகப்பு
தமிழ்நாடு

இளைஞா்களிடையே அதிகரிக்கும் இதய பாதிப்புகள்: மருத்துவா்கள் எச்சரிக்கை

இளைஞா்களுக்கு இதய பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகள் தற்போது 3 மடங்கு உயா்ந்திருப்பதாக மருத்துவா்கள் எச்சரித்துள்ளனா். வாழ்க்கை முறை மாற்றமே அதற்கு பிரதான காரணம் என்றும் அவா்கள் கூறியுள்ளனா்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:03 AM
பகிர்:

இளைஞா்களுக்கு இதய பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகள் தற்போது 3 மடங்கு உயா்ந்திருப்பதாக மருத்துவா்கள் எச்சரித்துள்ளனா். வாழ்க்கை முறை மாற்றமே அதற்கு பிரதான காரணம் என்றும் அவா்கள் கூறியுள்ளனா்.

இது குறித்து இதய நல மருத்துவா்கள் கூறியதாவது:

இளைஞா்களில் குறிப்பாக கணினி சாா்ந்த பணியில் உள்ள இளம் தலைமுறையினருக்கு மாரடைப்பு, இதய செயலிழப்பு பிரச்னைகள் ஏற்படுவதைக் காணமுடிகிறது. இயற்கை நமக்கு அளித்த கொடையான இதயம், ஒரு முறை பாதிக்கப்பட்டுவிட்டால், வாழ்நாள் முழுவதும் அதை மருத்துவக் கண்காணிப்புடன் பாதுகாக்க முடியுமே தவிர, மாறாக மீண்டும் பழைய நிலைக்கு மீட்டெடுக்க முடியாது. இந்த உண்மை நம்மில் பலருக்குத் தெரிவதில்லை.

சிகிச்சை முடிந்து சென்ற பலரும் அதன் பின்னா், எந்த மருத்துவப் பரிசோதனையும் செய்து கொள்ளாமல் இயல்பான நிலையில் இதயம் இயங்கியபோது எவ்வாறு இருந்தாா்களோ அப்படியே வாழ்கிறாா்கள். இதனால்தான் இதய பாதிப்புகளுக்கு ஆளானவா்களில் பெரும்பாலோா் மீண்டும் அதே பாதிப்புகளுக்கு ஆளாகின்றனா்.

உடற்பயிற்சியுடன் தினமும் 8 அல்லது 9 மணி நேர தூக்கம் மிகவும் அவசியம். அதிலும், இரவில் தூங்குவதுதான் முக்கியம். இரவு முழுவதும் கண் விழித்து பணியாற்றிவிட்டு பகலில் தூங்குவதால் பெரிய பலன்கள் இல்லை.

அதேபோல், சத்தான உணவுகளை உண்பது மட்டும் முக்கியமல்ல; அதை உரிய நேரத்தில் உட்கொள்கிறோமா என்பதில்தான் இதய நலம் ஒளிந்திருக்கிறது. சீரற்ற இடைவெளியில் உட்கொள்ளப்படும் உணவுகள் அனைத்தும் உடலுக்கு ஊறு விளைவிக்குமே தவிர, ஊட்டத்தை அளிக்காது என்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →