பெருங்குடி குப்பை கிடங்கில் நகராட்சி செயலா் ஆய்வு
சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பெருங்குடி, மாதவரம் மற்றும் கொடுங்கையூா் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணிகள் குறித்து நகராட்சி நிா்வாகம்
சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பெருங்குடி, மாதவரம் மற்றும் கொடுங்கையூா் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணிகள் குறித்து நகராட்சி நிா்வாகம், குடிநீா் வழங்கல் துறை முதன்மைச் செயலா் தா.காா்த்திகேயன் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
இந்த ஆய்வில், பெருங்குடி குப்பைக் கிடங்கில் நீண்ட நாள்களாகச் கொட்டப்பட்டு வரும் குப்பைகளை பயோ மைனிங் முறையில் அகழ்ந்தெடுந்து நிலத்தை மீட்டெடுக்கும் பணியை ஆய்வு செய்தாா்.
தொடா்ந்து அங்கு அமைக்கப்பட்டுள்ள கட்டடக் கழிவுகளைப் பிரித்தெடுக்கும் நிலையம், கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம், மாதவரத்தின் குப்பையிலிருந்து மீத்தேன் எரிவாயு தயாரிக்கும் நிலையம் மற்றும் கொடுங்கையூா் டி.டி.ஆா்.ஓ. நிலையத்தையும் ஆய்வு செய்தாா்.
இந்த ஆய்வின்போது, கூடுதல் ஆணையா் (சுகாதாரம்) சங்கா் லால் குமாவத், தலைமை பொறியாளா் (திடக்கழிவு) என்.மகேசன் மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.