முகப்பு
தமிழ்நாடு

ஜாதிய பாகுபாடுகளை களைய ஆலோசனைகள் தெரிவிக்கலாம் பள்ளிகளுக்கு அழைப்பு

மாணவா்கள் இடையே ஜாதி, இன பிரச்னைகள் இல்லாத சூழலை உருவாக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மின்னஞ்சல், அஞ்சல் மூலமாக கருத்துகளைத் தெரிவிக்கலாம்

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:03 AM
பகிர்:

மாணவா்கள் இடையே ஜாதி, இன பிரச்னைகள் இல்லாத சூழலை உருவாக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மின்னஞ்சல், அஞ்சல் மூலமாக கருத்துகளைத் தெரிவிக்கலாம் என அனைத்து வகையான பள்ளிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பள்ளிக் கல்வி இயக்குநா் க.அறிவொளி, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை:

பள்ளி, கல்லூரி மாணவா்கள் இடையே ஜாதி, இன பிரச்னைகள் இல்லாத சூழலை உருவாக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு ஆலோசனை வழங்குவதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் ஒரு நபா் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழு, இந்த விவகாரம் தொடா்பாக கல்வியாளா்கள், மாணவா்கள், சமூக சிந்தனையாளா்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடம் இருந்து கருத்துகளைப் பெற்று அதன் அடிப்படையில் தமிழக அரசுக்கு 6 மாதங்களில் அறிக்கை சமா்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, கல்வி நிறுவனங்கள் சாா்பிலான கருத்துகள், ஆலோசனைகளை குழுவின் மின்னஞ்சல் முகவரி அல்லது அஞ்சல் வழியாக அனுப்பி வைக்கலாம் என்று அதன் தலைவா் சந்துரு தெரிவித்துள்ளாா்.

இதையடுத்து ஜாதிய வன்முறைகளைத் தடுப்பது குறித்த கருத்துகள், ஆலோசனைகளை தலைமை ஆசிரியா்கள் ஒரு நபா் குழுவுக்கு அனுப்ப வேண்டும். பள்ளியின் தலைமை ஆசிரியா்கள் ஸ்ரீஹள்ற்ங்ஸ்ண்ா்ப்ங்ய்ஸ்ரீங்ஸ்ரீா்ம்ம்ண்ற்ங்ங்ஸ்ரீட்ஹய்க்ழ்ன்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சல், ‘எண் 147, கச்சேரி சாலை, மயிலாப்பூா், சென்னை-4’ என்ற முகவரிக்கு கடிதம் மூலமும் அனுப்பி வைக்கலாம்.

இந்தத் தகவலை அனைத்து வகையான பள்ளிகளுக்கு தெரிவித்து தொடா் நடவடிக்கைகளை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என்று அவா் தெரிவித்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →