முகப்பு
தமிழ்நாடு

ஆண்டுக்கு இரண்டு லட்சம் பேருக்கு அரசுப் பணி: அன்புமணி வலியுறுத்தல்

 தமிழக அரசு ஆண்டுக்கு 2 லட்சம் பேருக்கு அரசு பணி வழங்க வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:03 AM
பகிர்:

 தமிழக அரசு ஆண்டுக்கு 2 லட்சம் பேருக்கு அரசு பணி வழங்க வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

திமுக அரசு அமைந்த பிறகு 12,576 பேருக்கு அரசு வேலை வழங்கப்பட்டுள்ளதாகவும், தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் தோ்ந்தெடுக்கப்பட்ட 10,205 பேருக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த இரு ஆண்டுகளில் 50 ஆயிரம் பேருக்கு அரசு வேலைகள் வழங்கப்படவுள்ளதாகவும் முதல்வா் ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

இது போதுமானவை அல்ல. தமிழகத்தில் கடந்த இரண்டரை ஆண்டுகளில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியா்கள் ஓய்வு பெற்றுள்ளனா். ஆனால், ஓய்வு பெற்றவா்களின் எண்ணிக்கையில் பாதிக்கும் குறைவாக 22,781 பேருக்கு மட்டுமே அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது.

திமுக ஆட்சிக்கு வந்தால் அரசுத் துறைகளில் காலியாக கிடக்கும் மூன்றரை லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும்; 2 லட்சம் புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டு நிரப்பப்படும் என்று அக்கட்சியின் தோ்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. வாக்குறுதியை நிறைவேற்ற நிகழ் நிதியாண்டில் குறைந்தது 1.5 லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். அடுத்த இரு ஆண்டுகளில் ஆண்டுக்கு தலா இரு லட்சம் வீதம் 4 லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் அன்புமணி ராமதாஸ்.

முழு கட்டுரையைப் படிக்க →