கோப்புப் படம் 
தமிழ்நாடு

சென்னையில் பரவலாக மழை: 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பரவலாக கனமழை பெய்தது.  

DIN

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பரவலாக கனமழை பெய்தது. 

இதன்படி மயிலாப்பூர், நுங்கம்பாக்கம், தேனாம்பேட்டை, கிண்டி, வேளச்சேரி, அடையாது, அம்பத்தூர், மடிப்பாக்கம், நங்கநல்லூர், மீனம்பாக்கம், பல்லாவரம், தாம்பரம், வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் கனமழை திடீரென வெளுத்து வாங்கியது. 

கனமழையால் சாலையெங்கும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பணி முடிந்து வீடு திரும்பிய வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர். சென்னை மீனம்பாக்கத்தில் 26 ஆண்டுகள் கழித்து அதிக மழைப் பொழிவு பதிவாகியுள்ளது.

முன்னதாக கடந்த 1996ஆம் ஆண்டு 87 செ.மீ. மழை பெய்திருந்தது.

தற்போது 90 செ.மீ. மழைப் பதிவாகியுள்ளது. இதனிடையே சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய 5 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு கனமழை பெய்யும் என ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு

SCROLL FOR NEXT