முகப்பு
தமிழ்நாடு

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 102 பேருக்கு கரோனா! 

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 102 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Updated On : 15 பிப்ரவரி, 2023 at 11:25 AM
கோப்புப்படம்
பகிர்:

புது தில்லி: நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 102 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் நாள்தோறும் வெளியிட்டு வருகிறது. 

அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் புதிதாக 102 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை  4.46 கோடியாக (4,46,84,376) உயர்ந்துள்ளது. 

Advertisement

அதேநேரத்தில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,823 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெறுவோரின் விகிதம் 0.01 சதவீதமாக உள்ளது. 

தொற்று பாதிப்புக்கு கடந்த 24 மணி நேரத்தில் உத்தரப்பிரதேசத்தில் இரண்டு மற்றும் கேரளத்தில் ஒருவர் என 3 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து மொத்த இறப்பு எண்ணிக்கை 5,30,756 ஆக உயர்ந்துள்ளது. 

நோயிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,41,51,797 ஆக உயர்ந்துள்ளது, அதே நேரத்தில் இறப்பு விகிதம் 1 சதவீதமாக ஆக உள்ளது. 

தற்போது நாட்டில் குணமடைந்தவர்களின் விகிதம் 98.81 சதவீதமாக அதிகரித்துள்ளது. 

நாள்தோறும் தொற்று பாதிப்பு விகிதம் 0.08 சதவீதமாகவும், வாராந்திர பாதிப்பு விகிதம் 0.09 சதவீதமாகவும் உள்ளது.

நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை 220.63 கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.