முகப்பு
தமிழ்நாடு

முடிவுக்கு வந்தது வடகிழக்குப் பருவமழை!

தமிழ்நாடு, புதுச்சேரியில் வடகிழக்குப் பருவமழை இன்றோடு விடைபெறுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:42 PM
பகிர்:

தமிழ்நாடு, புதுச்சேரியில் வடகிழக்குப் பருவமழை இன்றோடு விடைபெறுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

வடகிழக்கு பருவமழை, தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் அதனை ஒட்டிய கடலோர ஆந்திரா, ராயலசீமா, தெற்கு உள் கர்நாடகா மற்றும் கேரளா பகுதிகளில் இருந்து இன்றுடன்(12.01.23) விலகியது. 

இதுகுறித்து வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட தகவலில், 

இன்றும், நாளையும் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 

வடதமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளைகளில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. உள் மாவட்டங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிசிரி செல்சியஸ் குறைவாக இருக்கக்கூடும். 

நீலகிரி மாவட்டத்தில் மலைப்பகுதிகளில் இரவு நேரங்களில் ஓரிரு இடங்களில் உறை பனிக்கு வாய்ப்புள்ளது. 

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளுக்கான வானிலை முன்னறிப்பு

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.