தென்காசி: 5 தாலுகாவில் பள்ளிகளுக்கு விடுமுறை!
தென்காசியில் 5 தாலுகாக்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
தென்காசியில் 5 தாலுகாக்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
தொடர் மழை காரணமாக செங்கோட்டை, தென்காசி, கடையநல்லூர், கடையம், கீழப்பாவூர் ஆகிய பகுதிகளில் உள்ல பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
படிக்க | நீலகிரி: 4 தாலுகாவில் பள்ளிகளுக்கு விடுமுறை!
Advertisement
Advertisement
கேரளத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில், நீலகிரி, தென்காசி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில நாள்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக (ஜூலை 8-10 ) வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.