ரூ.10 இருந்தால் நானே தலையை சீவிக்கொள்வேன்: உதயநிதி பதிலடி!
உதயநிதி ஸ்டாலினின் தலையை வெட்டிக் கொண்டுவருபவர்களுக்கு ரூ.10 கோடி பரிசாக வழங்கப்படும் என அயோத்தி சாமியார் பரமஹம்ச ஆச்சார்யா அறிவித்திருந்தார்.
மிரட்டலுக்கு அஞ்சமாட்டேன். கவலைப்படவும் மாட்டேன் என விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் தலையை வெட்டிக் கொண்டுவருபவர்களுக்கு ரூ.10 கோடி பரிசாக வழங்கப்படும் என அயோத்தி சாமியார் பரமஹம்ச ஆச்சார்யா அறிவித்திருந்தார்.
உதயநிதியின் புகைப்படத்தை கத்தியால் வெட்டிய ஆச்சார்யா, புகைப்படத்தை எரித்து சாம்பலாக்கி விடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
Advertisement
Advertisement
அதில், உதயநிதி தலையைத் துண்டிக்க எனது வாளையும் தயார் செய்துள்ளேன் எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், இது தொடர்பாக தூத்துக்குடியில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், 10 ரூபாய் சீப்பு இருந்தால் போதும், எனது தலையை நானே சீவிக்கொள்வேன் என கேலியாக பதிலளித்துள்ளார்.
மிரட்டலுக்கு எல்லாம் அஞ்சமாட்டேன் என்றும் கவலைப்படவும் மாட்டேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.