முகப்பு
கோப்புப் படம்.
தமிழ்நாடு

நடிகை சரண்யா மீது காவல்நிலையத்தில் புகார்

தமிழ்நாடு

நடிகை சரண்யா மீது காவல்நிலையத்தில் புகார்

Updated On : 1 ஏப்ரல், 2024 at 6:55 AM
கோப்புப் படம்.
பகிர்:

கார் நிறுத்துவது தொடர்பான தகராறில் நடிகை சரண்யா மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்சினிமாவின் பிரபல குணச்சித்திர நடிகை சரண்யா பொன்வண்ணன் சென்னை விருகம்பாக்கத்தில் வசித்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் ஸ்ரீதேவி தனது வீட்டின் கேட்டை திறந்தபோது அது சரண்யாவின் காரை உரசுவது போல் சென்றதாக கூறப்படுகிறது.

இதனால் இருத்தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சரண்யா குடும்பத்தினர் ஸ்ரீதேவியை வீடுபுகுந்து மிரட்டல் விடுத்துள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து ஸ்ரீதேவி சென்னை விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் நடிகை சரண்யா மீது புகார் அளித்துள்ளார்.

அதைத்தொடர்ந்து இந்த புகார் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே சரண்யா பொன்வண்ணன் தரப்பிலும் ஸ்ரீதேவி மீது புகார் அளிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →