தமிழ்நாடு

தமிழகத்தில் அமித் ஷாவின் தேர்தல் பிரசாரம் ஒத்திவைப்பு

தமிழகத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் தேர்தல் பிரசாரம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

DIN

தமிழகத்தில் மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா நாளை(ஏப். 4), மற்றும் நாளை மறுநாள் (ஏப். 5) பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளா்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

நாளை தேனி தொகுதியில் அமமுக வேட்பாளா் டி.டி.வி.தினகரன், மதுரையில் பாஜக வேட்பாளா் ராம.சீனிவாசனை ஆதரித்து அமைச்சர் அமித் ஷா பரப்புரையில் ஈடுபட இருந்தார்.

தொடா்ந்து, ஏப்.5-இல் சிவகங்கையில் பாஜக கூட்டணி வேட்பாளா் தேவநாதன் யாதவ், தென்காசியில் பாஜக கூட்டணி வேட்பாளா் பி.ஜான் பாண்டியன், கன்னியாகுமரியில் பாஜக வேட்பாளா் பொன்.ராதாகிருஷ்ணனை ஆதரித்து அமைச்சர் அமித் ஷா பிரசாரத்தில் ஈடுபடுவார் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், தமிழகத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் தேர்தல் பிரசாரம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சுப செலவுகள் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

ஊழல் வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறை: வங்கதேச நீதிமன்றம் தீா்ப்பு

பிகாா் சட்டப்பேரவைக்கு சக்கர நாற்காலியில் வந்த தேஜஸ்வி யாதவ்!

அரியலூரில் பறிமுதல் வாகனங்கள் பிப்.12-இல் ஏலம்

அச்சுறுத்தும் அழியாத ரசாயனங்கள்

SCROLL FOR NEXT