முகப்பு
கோப்புப்படம்
தமிழ்நாடு

குமரி, 3 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!

தென் இந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது.

தமிழ்நாடு

குமரி, 3 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!

தென் இந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது.

Updated On : 3 ஏப்ரல், 2024 at 5:12 AM
கோப்புப்படம்
பகிர்:

கன்னியாகுமரி உள்பட 4 மாவட்டங்களில் இன்று பிற்பகல் 1 மணிவரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென் இந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன் காரணத்தால், செவ்வாய்கிழமை தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளிலும், காரைக்காலிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், பகல் 1 மணிவரை கன்னியாகுமரி, தென்காசி, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →