தமிழ்நாடு

வெள்ள நிவாரணம்: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு!

ரூ.2,000 கோடி வெள்ள நிவாரணம் விடுவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி வழக்கு.

DIN

வெள்ள நிவாரணத் தொகை வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு புதன்கிழமை வழக்கு தொடர்ந்துள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் மிக்ஜம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட வடதமிழகமும், அதனைத் தொடர்ந்து கனமழையால் வெள்ளம் ஏற்பட்டு திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தமிழகத்திலும் கடுமையான சேதம் ஏற்பட்டது.

இதற்கு வெள்ள நிவாரணம் கோரி மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும், தலைமைச் செயலாளரும் பல முறை கடிதம் எழுதியும் நிதி ஒதுக்கப்படவில்லை.

இந்த நிலையில், தமிழகத்துக்கு வெள்ள நிவாரணமாக ரூ.2,000 கோடி வழங்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு அளித்துள்ளது.

விரைவில் இந்த வழக்கு விசாரணைக்கு பட்டியலிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மன அழுத்தமா? இதை மட்டும் செய்யுங்கள்! - ஆய்வில் முக்கியத் தகவல்

மேட்டூர் அணை நீர்வரத்து சரிவு!

நெல்லையில் செப். 7 வாக்குத் திருட்டு விளக்க மாநாடு! பிரியங்கா பங்கேற்பு?

15 லட்சம் ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட ஏலேல சிங்க விநாயகர்!

ஐபிஎல்லில் இருந்து அஸ்வின் திடீர் ஓய்வு! ரசிகர்கள் அதிர்ச்சி!

SCROLL FOR NEXT