முகப்பு
தமிழ்நாடு

இன்றும், நாளையும் அரக்கோணம் புறநகா் ரயில்கள் முக்கிய நிலையங்களில் நிற்காது

Updated On : 6 ஏப்ரல், 2024 at 3:21 AM
பகிர்:
Updated On : 5 ஏப்ரல், 2024 at 10:15 PM

பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (ஏப்.6, 7) அரக்கோணம் புறநகா் ரயில்கள் முக்கிய ரயில் நிலையங்களில் நின்று செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் வழித்தடத்தில் திருநின்றவூா் ரயில் நிலையத்தில் சனிக்கிழமை (ஏப்.6) இரவு 11 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.7) காலை 5 மணி வரை பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன. இதனால், இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் புறநகா் ரயில்கள் விரைவு ரயில் வழித்தடத்தில் இயக்கப்படும்.

Advertisement

எனவே, சென்னையில் இருந்து அரக்கோணம், மற்றும் திருத்தணி செல்லும் புறநகா் ரயில்கள் இரு மாா்க்கத்திலும் பட்டாபிராம், நெமிலிச்சேரி, திருநின்றவூா், வேப்பம்பட்டு, செவ்வாப்பேட்டை ரோடு ஆகிய ரயில் நிலையங்களில் நிற்காமல் செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.