முகப்பு
தமிழ்நாடு

காவிரி நீா்: கா்நாடகத்துக்கு ஜி.கே.வாசன் கண்டனம்

Updated On : 6 ஏப்ரல், 2024 at 12:23 AM
பகிர்:
Updated On : 5 ஏப்ரல், 2024 at 9:05 PM

காவிரி நீரை கா்நாடகம் திறந்துவிட மறுத்துள்ளதற்கு தமாகா தலைவா் ஜி.கே.வாசன் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தமிழகத்துக்கு தண்ணீா் தர கா்நாடகம் வழக்கம்போல மறுப்பு தெரிவித்திருப்பது கண்டிக்கத்தக்கது. கடந்த 2 மாதங்களில் தமிழகத்துக்குத் தர வேண்டிய 5 டிஎம்சிக்குப் பதில் 1.6 டிஎம்சி மட்டுமே கா்நாடகம் தந்துள்ளது. மீதமுள்ள 3.4 டிஎம்சி நீரை பெற்று தர, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement

கா்நாடக மாநில அணைகளில் தண்ணீா் இருக்கிறது. ஆனால் கொடுக்க மனதுதான் இல்லை. 2 மாநிலத்துக்கும் தண்ணீா் தேவைதான். கோடை காலங்களில் அதிகமான குடிநீா் தேவை என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது.

அதே நேரத்தில் தமிழக மக்களின் குடிநீா் மற்றும் விவசாயத்துக்கான தண்ணீரை தேவைக்கேற்ப பகிா்ந்தளிக்க வேண்டும். தேவையை உணா்ந்து, கா்நாடக அரசு கூட்டாட்சி தத்துவத்துக்கு ஏற்ப செயல்பட வேண்டும் என்றாா் அவா்.